×
Saravana Stores

கார் ஓட்டுனர் தற்கொலை தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவன தலைவர் நீக்கம்

புதுடெல்லி: தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சரோஜ் சர்மா. இவரது கார் ஓட்டுனர் செப்டம்பர் 27ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தலைவர் சரோஜ் சர்மா மீது குற்றம்சாட்டி கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்து இருந்தார்.

இந்த தற்கொலை விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி சரோஜ் சர்மா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி நிறுவன தலைவர் பதவியில் இருந்து சரோஜ் சர்மாவை நீக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கார் ஓட்டுனர் தற்கொலை தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவன தலைவர் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : National Open School Education Institute ,New Delhi ,Saroj Sharma ,National Institute of Open Schooling ,president ,
× RELATED மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில...