×

மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு சென்னை, பெங்களூருவில் இருந்து இரு விமானங்கள் நேற்றிரவு வந்தன. மதுரையில் நேற்றிரவு பெய்த கனமழை, அதிகக் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானங்களால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை. இதனால் இந்த விமானம், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்தபடியே இருந்தது. இதேபோல் பெங்களூருவில் இருந்து வந்த விமானமும் இறங்க முடியாமல், தொடர்ச்சியாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு இரவு 9.20 மணிக்கு சென்னை விமானமும், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் விமானமும் பாதுகாப்பாக அடுத்தடுத்து தரையிறங்கின.

The post மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Bengaluru ,Madurai Airport ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை