×

செங்குன்றம் தீயணைப்பு நிலையம் சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு

புழல்: சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செங்குன்றம் தீயணைப்பு நிலையம் சார்பில், பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சோழவரம் அடுத்த பூதூர், ஞாயிறு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் செங்குன்றம், ஏரிக்கரையோரம் உள்ள தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகங்களில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தென்னரசு மேற்பார்வையில், செங்குன்றம் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல் செங்குன்றம் அடுத்த அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையின்போது மாணவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது பாதிப்பு ஏற்படாமல் எப்படி தடுப்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்களால் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து, தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post செங்குன்றம் தீயணைப்பு நிலையம் சார்பில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sengunram fire station ,Cholavaram ,Sengunram ,Buthoor ,Janayir ,Senggunram ,
× RELATED செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில்...