×
Saravana Stores

பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள்: மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்

திருவள்ளூர்: பருவ நிலை மாற்றத்தால் சிகிச்சைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதே நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக வெயில், மழை என மாறிமாறி வருவதால் பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் வழக்கத்திற்கு மாறாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இருப்பினும், மருத்துவமனையில் பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருக்கின்றனர். மூத்த மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாததால் பிரச்னைகளை எளிதில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மூத்த மருத்துவர்கள், அனுபவம் நிறைந்த மருத்துவர்களை இங்கு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள்: மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Government Medical College Hospital ,Northeast ,Monsoon ,Thiruvallur district ,
× RELATED அரசு மருத்துவக் கல்லூரி...