×

செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!!

டெல்லி: செபி தலைவர் மாதவி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். ஒரு பெண்மணியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூட்டம் மற்றொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது கணக்கு குழு முன் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மாதவி கோரிக்கை ஏற்கனவே நிராகரிப்பு செய்யப்பட்டது.

The post செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : PAC ,CEBI ,Delhi ,Parliamentary Public Accounts Committee ,Sebi ,Madhavi Puri Buch ,Madhavi Buch ,Dinakaran ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...