- நாமக்கல் கவிஞர் வீடு
- அமைச்சர்
- வேலு
- சென்னை
- தலைமை செயலகம்
- நாமக்கல் கவிஞர் மாளிகை
- தமிழ்நாடு அரசின் பொதுச் செயலகம்
- புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
- தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் அனைத்து செயல்பாடுகள் தொடங்குகின்றன. சென்னை தலைமை செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் பலர், இன்று காலை திடீரென ஒரு அதிர்வை ஏற்பட்டதாகவும், அதே நேரத்தில் முதல் தளத்தில் உள்ள தரையில் இருக்கும் டைல்ஸில் சத்ததுடன் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறி அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறினர். 10 மாடிக் கட்டடத்தில் உள்ள ஊழியர்களுக்கும் கட்டடத்தில் விரிசல் என வதந்தி பரவிய நிலையில் அனைத்து ஊழியர்களும் வெளியேறினர்.
இதன்பின்னர் தகவலறிந்த காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் டைல்ஸ்களில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது. கட்டட பராமரிப்பு பணியின்போது டைல்ஸ்-ல் ஏற்பட்ட விரிசலை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். கட்டடம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது; யாரும் அச்சப்படத் தேவையில்லை. உடைந்த டைல்ஸ்கள் அகற்றப்பட்டு புதிய டைல்ஸ்கள் பதிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post தலைமைச் செயலகத்தில் திடீர் விரிசல்.. நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.