சென்னை: தமிழ்நாடு அரசு போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக காவல்துறையினரும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்:
தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும். பாதை ஒளிரட்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் போதைக்கு எதிராக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த வீடியோவில்; போதை என்பது ஒரு கொடிய விலங்கு. சமீபகாலமாக தமிழ்நாடு அரசு அதை ஒழிக்க பெரும்பாடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு நாமும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post போதையின் பாதையில் செல்ல வேண்டாம்: தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் appeared first on Dinakaran.