×

அரசு பள்ளியில் கலை திருவிழா

திருத்துறைப்பூண்டி, அக். 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்த கலைத்திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார். வானவில் மன்ற பொறுப்பாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள் ஆடின்மெடோனா, உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சிவராமன் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் நித்யா, அறிவியலில் மின்னாற்பகுப்பு, பிப்பட் பயன்பாடு, பதங்கமாதல், உயிரினங்களுக்கு இரு சொல் பெயரிடுதல் முறை போன்றவையும், கணிதத்தில் மிகச்சிறிய பொதுமடங்கு, மிகப்பெரும் பொதுமடங்கு போன்றவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள் சொர்ணா, இலக்கியா, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் கலை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Art Festival ,Government School ,Thiruthurapundi ,Thiruthuraipundi Government Men's ,Secondary ,School ,Thiruvaroor District ,Vijayan ,Rainbow ,Forum ,Meenakshi Sundaram ,Adinmedona ,Uma ,
× RELATED புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு...