- கோவில்பட்டி
- கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லூரி
- இணை நீதிபதி
- மரிகலா
- மாவட்டம்
- நீதிபதி
- கருப்பசாமி
- குற்றவியல்
- பீட்டர்
- சம்பத் குமார்
- தின மலர்
கோவில்பட்டி, அக். 24: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நடுவர் நீதிபதி பீட்டர், அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சண்முகவேல் பங்கேற்றார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
எத்தனையோ பெற்றோர், பைக் விபத்தில் தங்களது குழந்தைகளை இழந்து தவிக்கின்றனர். டூவிலரில் 3 பேர் செல்லக்கூடாது. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். தற்போது ஆன்லைன் மோசடி பெருகி விட்டது. மாணவர்கள் மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வாகனத்திற்கும், அதனை ஓட்டுபவர்களுக்கும் இன்சூரன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும், என்றார்.
முகாமில் வழக்கறிஞர் சந்திரசேகர், வளன் வினோசிங், சுந்தரேசன் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மோசடி கும்பலிடம் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.