×
Saravana Stores

வேலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, அக்.24: விராலிமலை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேலூர் மின் விநியோக பீடரில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வேலூர், அக்கல் நாயக்கன்பட்டி, மேலபச்சங்குடி, புதுப்பட்டி, குறிச்சி பட்டி, மேப்பூதகுடி, தொட்டியபட்டி, சூரியூர், குளவாய்ப்பட்டி, பேரம்பூர், மதயானைப்பட்டி மற்றும் வளதாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை
(வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி)
அறந்தாங்கி கோட்டத்தின் கட்டுபாட்டு பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களான நாகுடி, கொடிக்குளம் ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலைய பகுதிகள்: கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில், நாகுடி, திருவாப்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் தனபால் தெரிவித்துள்ளார்.

The post வேலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Viralimalai ,Vadugapatti ,Akkal Nayakkanpatti ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...