* ஜெர்மனி வெற்றி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியுடன் டெல்லியில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் ஹென்ரிக் மெர்ட்ஜென்ஸ் 4வது நிமிடத்திலும், லூகாஸ் விண்ட்பெதர் 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பிலும் கோல் போட்டனர்.மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி. ஜெர்மனி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் இன்று நடக்கிறது.
* ஜிம்பாப்வே சாதனை
காம்பியா அணியுடன் நைரோபியில் நேற்று நடந்த டி20 போட்டியில் ஜிம்பாப்வே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன் குவித்து உலகசாதனை படைத்தது (பென்னட் 50, மருமாணி 62, கேப்டன் சிக்கந்தர் ரஸா 43 பந்தில் 7 பவுண்டரி, 15 சிக்சருடன் 133*, கிளைவ் மடாண்டே 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 53). சர்வதேச டி20ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் (314/3), வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா (297/6) படைத்த சாதனைகள் நேற்று தகர்க்கப்பட்டன. காம்பியா 14.4 ஓவரில் 54 ரன்னுக்கு சுருண்டது.
* பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று காலை 10.30க்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
* குஜராத் டைட்டன்ஸ் அணி பயிற்சியாளர் குழுவில் இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் பார்திவ் படேல் இணைய உள்ளார்.
* இலங்கை அணியுடன் பல்லெகெலேவில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 15.2 ஓவரில் 58 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷெர்பேன் ரூதர்போர்டு – குடகேஷ் மோத்தி இனைந்து 9வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்தனர். ரூதர்போர்டு 80, குடகேஷ் 50* ரன் விளாச… வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.