×
Saravana Stores

விவாகரத்து வழக்கு.. தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது: குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை: விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாட்டால் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களுக்கு விசா கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர முடியாததால் அமெரிக்காவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதை ஏற்க மறுத்த குடும்ப நல நீதிமன்றம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என கூறி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வாக்குமூலம் பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்ற வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் பிற வழக்குகள் குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்பளிக்க வேண்டும் என்றும், அவர்களை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என்றும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post விவாகரத்து வழக்கு.. தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது: குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Family Welfare Court ,Tamil Nadu ,America ,Chennai Family Welfare Court ,
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான...