×

நகராட்சி பள்ளியில் கலைத்திருவிழா

 

சிவகங்கை, அக்.23: சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், குறுவள மைய அளவிலான, கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை மரியசெல்வி வரவேற்றார்.போட்டிகளில் 12 அரசு பள்ளிகள் மற்றும் 2அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தவர்கள் குறுவள மைய அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வட்டார மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெறுவர். ஆசிரியர் பயிற்றுநர் முகமதுகாசிம் ஒருங்கிணைத்தார். நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post நகராட்சி பள்ளியில் கலைத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Art Festival ,Municipal School ,Sivagangai ,Junior Center Level Art Festival Competitions ,48 Colony Municipal Middle School ,Sivaganga City Council ,President ,Durai Anand ,District Education Officer ,Indrani ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் மலர் கண்காட்சி