×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம்: 2வது நாளாக நீடித்தது

 

நிலக்கோட்டை, அக்.23: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சுமார் 115 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையாக இரு மடங்கு வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்துள்ளதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் நேற்று முன்தினம் தொடர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதில் அணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம்: 2வது நாளாக நீடித்தது appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Tamil Nadu State Primary Agriculture Cooperative Credit Union ,Nilakottai Taluk ,Dindigul District ,Primary Agricultural Cooperative Credit Unions ,City Cooperatives ,
× RELATED பெண் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை