கிலாஸ்கோ: ஸ்காட்லாந்தில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி உள்பட முக்கியமான விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அதிலும் இந்தியா பதக்க வேட்டை நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ள கிரிக்கெட், ஹாக்கி, பேட்மின்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
ரக்பி செவன்ஸ், பீச் வாலிபால், மவுன்டெய்ன் பைக்கிங், டைவிங் போட்டிகளும் நீக்கப்படுள்ளன. காமன்வெல்த் போட்டியில் 1988ல் அறிமுகமான ஹாக்கி, தற்போது முதல் முறையாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிப் பற்றாக்குறையே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
The post 2026 காமன்வெல்த் போட்டியில் முக்கிய விளையாட்டுகள் நீக்கம்: இந்தியாவுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.