×
Saravana Stores

நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை

டெல்லி : நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சித்திக்கை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சித்திக் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்; அதுவரை சித்திக்கை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Siddique ,Delhi ,Supreme Court ,
× RELATED நடிகைக்கு பாலியல் தொல்லை; நடிகர்...