- அயோடின் குறைபாடுகள் பற்றிய கண்காட்சி
- தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை
- திருவள்ளூர்
- உலக அயோடின் குறைபாடு தடுப்பு தினம்
- தமிழ்நாட்டுத் துறை
- of
- உணவு பாதுகாப்பு
- அயோடின் குறைபாடு கண்காட்சி
- தின மலர்
திருவள்ளூர்: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அயோடின் என்பது மனித வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான நுண்ணூட்டச் சத்து. தைராய்டு குறைபாடு, மனநோய் – மனநலம் குன்றியநிலை, இயல்புக்கு மாறான நோய், மூளை பாதிப்பு, குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி குறைபாடு, காது கேளாதோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தன்னிச்சையான கருக்கலைவு, செவிப்புலன் பார்வை மற்றும் பேச்சுக் குறைபாடு கோளாறுகள் ஆகும்.
அயோடின் போதுமான அளவு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் அயோடின் குறைப்பாட்டின் விளைவுகளை முன்னிலை படுத்துவதற்கும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உலக அயோடின் குறைபாடுகள் மற்றும் நோய்கள் தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் அயோடின் உப்பு பயன்பாட்டின் செயல் விளக்கம் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை கலெக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு பேசினார்.
இதில், அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் அல்லாத உப்பு செயல் விளக்கம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களால் உலக அயோடின் குறைபாடுகள் மற்றும் நோய்கள் தடுப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உலக அயோடின் குறைபாடுகள் மற்றும் நோய்கள் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அயோடின் குறைபாடுகள் குறித்த கண்காட்சி: கலெக்டர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.