ஆரல்வாய்மொழி, அக்.22: தோவாளை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பலகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் சீராக விநியோகம் செய்யும் விதத்தில் நல்ல தண்ணீர் குளம் அருகே ரூ.5.27 லட்சத்தில் குடிநீர் திட்ட மின்மோட்டார் அறை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாணு தலைமையில் நடந்தது.
ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்மோட்டர் அறையினை திறந்து வைத்தார். வார்டு உறுப்பினார்கள் வித்யாலெட்சுமி, ராமலெட்சுமி. சரஸ்வதி, சந்தியாதேவி, சிவகாமி, இசக்கிமுத்து, ஆறுமுகம்பிள்ளை, மணிகண்டன். ஊராட்சி செயலர் லெட்சுமி, ஊராட்சிகளின் பணிமேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைந்த குழு கூட்டமைப்பு குழு தலைவர் சரிதா, மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post தோவாளை ஊராட்சியில் குடிநீர் திட்ட கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.