- ஏழுமலையான் கோவில்
- திருமலா
- ஏழுமலையான்
- திருமலை திருப்பதி தேவஸ்தானம்
- ஆகம சாஸ்திரம்
- திருப்பதி ஏழு மலையான் கோயில்
திருமலை: திருமலை வான்வழி செல்ல தடையிருந்தும் ஏழுமலையான் கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் மேல் பகுதியில் ஆகம சாஸ்திரத்தின்படி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்லகூடாது எனக்கூறி திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலையை நோ பிளைட் ஜோன் ஆக (விமான பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியாக) அறிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் வாய்மொழி உத்தரவாக தேவையில்லாமல் திருமலை வான்வழி பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டது. இருப்பினும் அவ்வப்போது விமானம் சென்று வருகிறது. அவ்வாறு நேற்று ஒரு ஹெலிகாப்டர் ஏழுமலையான் கோயில் மீது சிறிது நேரம் சுற்றி வந்தது. இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தானத்திடன் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
The post ஏழுமலையான் கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.