சென்னை: பாலைவன ரோஜாக்கள்’ படத்தயாரிப்பின் போது, எளிய நட்புறவு கொண்டு எங்களுடன் இணக்கமாக பழகியவர் முரசொலி செல்வம் என நடிகர் நடிகர் சத்யராஜ் புகழாரம் சூட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் திருவுருவப் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முரசொலி செல்வம் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ்; ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தயாரிப்பின் போது, எளிய நட்புறவு கொண்டு எங்களுடன் இணக்கமாக பழகியவர் முரசொலி செல்வம்.
தி.மு.க.விலேயே, எனக்கு முதன்முதலில் நட்பு ஏற்பட்டது முரசொலி செல்வம் அவர்களுடன் தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர், கொள்கை பிடிப்பிற்காக சிறை செல்ல நேர்ந்த பொழுது, நமது முதலமைச்சர் பிறந்தார். நமது முதலமைச்சர் சிறையில் இருந்த நேரத்தில் நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். இது போன்ற கொள்கை குன்றுகள் இருக்கும் வரை கழகத்தின் பணிகள் என்றும் தடைபடாது. சட்டப்பேரவையில் கூண்டில் ஏற்றப்பட்டபோது கூட, முரசொலி செல்வம் எவ்வித பதற்றமும் இல்லாதவராகவே இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுமையும் பதற்றமற்றவராகதான் இருந்தார் என்று கூறினார்.
The post எளிய நட்புறவு கொண்டவர் முரசொலி செல்வம்: நடிகர் சத்யராஜ் புகழாரம் appeared first on Dinakaran.