×
Saravana Stores

பிரட் ஸ்நாக்ஸ்

தேவையான பொருட்கள்:

பிரட் – 4
முட்டை – 1
பால் – 1/4 கப்
உப்பு – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
ஆரிகானோ/பிட்சா சீசனிங் – சிறிது
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அதன் ப்ரௌன் நிற முனைகளை வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் நீக்கிய அந்த பிரட் பகுதியை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு பொடித்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பிரட்டின் வெள்ளைப் பகுதியை முக்கோண வடிவில் அல்லது சதுர வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், ஆரிகனோ/பிட்சா சீசனிங், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, முட்டை பால் கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் பிரட்டி தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டிய பிரட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான பிரட் ஸ்நாக்ஸ் தயார்.

The post பிரட் ஸ்நாக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி