×
Saravana Stores

தட்டை

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
பச்சரிசி மாவு- 1 1/2 கப்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.அதன் பின் சீரகத்தை எடுத்து கையால் நசுக்கி சேர்க்க வேண்டும்.பின் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிய சேர்த்து கைகளால் ஒருமுறை கிளறி விட வேண்டும். பிறகு அதில் நன்கு கொதிக்க வைத்த 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து சற்று கெட்டியாக, அதே சமயம் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாலிதீன் கவரை சப்பாத்தி மனையில் விரித்து, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி தடவ வேண்டும். பின் அதில் தட்டை மாவை கொஞ்சம் அதிகமாக எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் டம்ளர் கொண்டு சிறு சிறு வட்ட துண்டுகளாக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் வட்ட துண்டுகளாக்கி தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான தட்டை தயார்.

The post தட்டை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆப்பிள் ரிப்பன் சேவ்