×

மதுரை திருமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதிய விபத்தில் தூய்மை பெண் பணியாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் பகுதியில் நாகரத்தினம், லட்சுமி ஆகியோர் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இருவரும் தங்களுக்கு பரிச்சயமான ஆண் நண்பருடன் இருசக்கர வாக்கத்தில் 3 பேராக சேர்ந்து பயணித்துள்ளனர்.

அவர்கள் திருமங்கலத்திலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தத்தில் ஒப்பந்த பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனரும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரும் தப்பி சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமங்கலம் நகராட்சி அருகிலேயே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை திருமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam, Madurai ,Madurai ,Thirumangalam Devar ,Thirumangalam, Madurai ,Dinakaran ,
× RELATED ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு...