×

சிலியில் ரத்தக்கறை படிந்த முகத்துடன் அச்சமூட்டும் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

சாண்டியாகோ: ரத்தக்கறை படிந்த முகங்கள், கோரப்பற்கள் என பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் செல்லும் இத்தகைய சாம்பீஸ்களை பேய் படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். தென் அமெரிக்க நாடான சிலியில் பட்டப்பகலில் சாலையில் இதனை சாம்பீஸ்கள் ஒருசேர நடந்து செல்வது அந்நாட்டு மக்களுக்கு ஒரு வழக்கமான நிகழ்வாகவே உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா சாண்டியாகோ நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

நகரின் பிரதான சாலைகள் வழியாக நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சாம்பீஸ் வேடத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்து அணிவகுப்பை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதன்முறையாக சாம்பீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து அர்ஜெண்டினா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரேசில், சிலி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

The post சிலியில் ரத்தக்கறை படிந்த முகத்துடன் அச்சமூட்டும் சாம்பீஸ்கள் அணிவகுப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chile ,Santiago ,Patapagal ,Chile, South America ,Champions Parade Ceremony with a Bloody Face ,Dinakaran ,
× RELATED கியூபா நாட்டில் அடுத்தடுத்து...