- பரமத்தி வேலூர்
- கண்ணன்
- வெள்ளாளபாளையம்
- நாமக்கல் மாவட்டம்
- கீதா
- நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
பரமத்தி வேலூர், அக்.21: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(48). ஏசி மெக்கானிக்கான இவரது மனைவி கீதா. இவர்களது வீடு நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். மாலை 7 மணிக்கு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ₹3 லட்சம் ரொக்க பணம் மற்றும் 2.5 பவுன் நகை மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.
தகவலின்பேரில், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வீட்டு பூட்டை உடைத்து ₹3 லட்சம் பணம், நகை கொள்ளை appeared first on Dinakaran.