- தேசிய கராத்தே போட்டி
- நாகர்கோவில்
- 20வது தேசிய கராத்தே டூ சாம்பியன்ஷிப்
- இந்திய சோடோகன் கராத்தே டூ சர்வதேச கூட்டமைப்பு
- நாகூர்கோயில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- மத்தியப் பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
- கேரளா
நாகர்கோவில், அக்.21 : இந்திய சோட்டோகான் கராத்தே டூ இன்டர்நேஷனல் பெடரேசன் சார்பில் 20வது தேசிய கராத்தே டூ சாம்பியன் ஷிப் போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று முன்தினம் தொடங்கின. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், கேரளா உள்பட 7 மாநிலங்களில் இருந்து சுமார் 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். நேற்று இறுதி போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஜூடோ சங்க தலைவர் கேட்சன் பங்கேற்றார். மாவட்ட ஜூடோ சங்க இணை செயலாளர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். ஸ்டேட் வங்கி சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சீனியர், ஜூனியர், சப் சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டி ஒருங்கிணைப்பாளர் கராத்தே சங்க செயலாளர் கராத்தே ஸ்டீபன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post நாகர்கோவிலில் தேசிய கராத்தே போட்டிகள் 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.