×

தடை அறியாமல் வந்த சரக்கு வேன் காட்சிமண்டப தூண்களில் சிக்கியது: நீண்டநேரம் போராடி மீட்பு

நெல்லை: நெல்லை டவுனில் கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அறியாமல் வந்த சரக்குவேன், காட்சி மண்டபத்தில் நுழைந்தபோது தூண்களுக்கு இடையே சிக்கி தவித்தது. தகவலறிந்து வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி வேனை மீட்டனர்.நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலை ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இங்கு காட்சி மண்டபம் உள்ளதால் இதன் வழியாக கனரக வாகனங்கள் செல்லவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி மண்டபத்தின் மைய நுழைவுப்பகுதி பூட்டப்பட்டு பக்கவாட்டில் உள்ள இரு சிறிய பாதைகள் வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூகுள் மேப் உதவியுடன் நேற்று மதியம் சுமார் 2 மணிக்கு சென்னையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று, இங்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை அறியாத நிலையில் சேரன்மகாதேவி சாலையில் நுழைந்தது. ரூட் மேப் போட்டு வழி தேடிச் சென்ற அந்த சரக்குவேன் ஓட்டுநர் காட்சி மண்டபத்தின் சிறிய நுழைவு பாதை வழியாக செல்ல முயன்றபோது மண்டபத்தின் தூண்களுக்கு இடையே சரக்குவேன் சிக்கிக் கொண்டது. இதனால்  வெளியே வரமுடியாமலும் முன்னேறமுடியாமலும் ஸ்தம்பித்து வேன் நின்றது. தகவலறிந்து விரைந்து வந்த நெல்லையப்பர் கோயில் பணியாளர்கள் மற்றும் டவுன் போலீசார், சரக்கு வேனை மீட்கும் பணியில் களமிறங்கினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மண்டப தூண்களுக்கும் வேனுக்கும் சேதமின்றி வேனை மீட்டு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தடை அறியாமல் வந்த சரக்கு வேன் காட்சிமண்டப தூண்களில் சிக்கியது: நீண்டநேரம் போராடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Neddy Town ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...