- நெல் கொள்முதல் மையம்
- வத்ராயூரி
- வத்திரேரிபு
- விருதுநகர் மாவட்டம்
- மேற்குத்தொடர்ச்சி
- வத்திராயிரவு
- வத்திராயிரு
- நெல்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் கோடை நெல் அறுவடைப் பணி நடந்து வரும் நிலையில் 4 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. கோடை விவசாயமாக சுமார் 6500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணி நடந்து வருகிறது.
எனவே வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காவிட்டால் தனியாருக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வத்திராயிருப்பு, கான்சாபுரம், ராமசாமிபுரம், தம்பிபட்டி ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.