×
Saravana Stores

ஆதரவற்றோருக்கான இடத்தை அபகரிக்க முயற்சி ஆந்திரா மாஜி எம்பி வீடுகளில் ஈடி ரெய்டு

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவின் யெண்டாடா கிராமத்தில் 12.51 ஏக்கர் அரசு நிலம் மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை கட்ட தன்னார்வ அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை கைப்பற்ற முயன்றதாக 2020ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய எம்பியும், திரைப்பட தயாரிப்பாளருமான எம்விவி சத்யநாராயணா மீது புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் பதிவு செய்தனர். அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் முன்னாள் எம்.பி. சத்தியநாராயணா, அவரது ஆடிட்டர் கண்மணி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் காட்டே பிரம்மாஜி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இதேபோல் ஹயக்ரீவா இன்ப்ராடெக் நிறுவன உரிமையாளர் ராதாராணியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

The post ஆதரவற்றோருக்கான இடத்தை அபகரிக்க முயற்சி ஆந்திரா மாஜி எம்பி வீடுகளில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : ED ,Andhra ,Tirumala ,Yendada village ,Maduravada, Visakhapatnam, Andhra Pradesh ,YSR Congress party ,
× RELATED இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி 5 மாநிலங்களில் ஈடி சோதனை