×

சட்டீஸ்கர் குண்டு வெடிப்பில் 2 எல்லை வீரர்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவல்படை வீரர்கள் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் ரோந்து மற்றும் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொட்லியார் கிராமம் அருகே வீரர்கள் வரும்வழியில் நக்சல்களால் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த இந்தோ -திபெத் எல்லை காவல் படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post சட்டீஸ்கர் குண்டு வெடிப்பில் 2 எல்லை வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,RAIPUR ,Indo-Tibetan Border Guard ,Border Security Force ,District Reserve Police ,Naxals ,Narayanpur district ,Kotliar village ,Dinakaran ,
× RELATED ஆயுதங்களை கீழே போட்டு...