×

கண்டமனூர் பகுதியில் சின்னவெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வருசநாடு, அக். 19: கண்டமனூர் பகுதியில் எட்டப்பராஜபுரம், கணேசபுரம், கோவிந்தநகரம், லட்சுமிபுரம், துரைச்சாமிபுரம், அண்ணாநகர், குப்பிநாயக்கன்பட்டி, ஆத்தங்கரைபட்டி, அய்யனார்கோவில், பொன்நிலம், உள்ளிட்ட கிராம பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சின்னவெங்காயம் விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முதற்கட்டமாக களையெடுக்கும் பணியும் உரம்போடுதல் பணியும், பூச்சி மருந்து தெளித்தல் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் தற்பொழுது சின்ன வெங்காயத்திற்கு உகந்த நிலமாகவும் அமைந்துள்ளதால் ஒவ்வொருஆண்டும் சின்ன வெங்காயத்திற்கு இப்பகுதியில் முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அறுவடை காலங்களில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பாக வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது இந்த சின்னவெங்காயத்தை தேனி, மதுரை, கம்பம், சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கு வாரச்சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் காலச் சூழ்நிலைகளை அறிந்து விவசாயம் செய்வதினால் அதிக லாபம் பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு விவசாய நிலத்துக்குச் சென்று கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post கண்டமனூர் பகுதியில் சின்னவெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Ettapparajapuram ,Ganesapuram ,Govindanagaram ,Lakshmipuram ,Thuraichamipuram ,Annanagar ,Kuppinayakanpatti ,Athangaraipatti ,Aiyanarkovil ,Ponnilam ,
× RELATED கடமலை -மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி தீவிரம்