- சமூக-பொருளாதார ஆய்வில் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்
- உசிலம்பட்டி
- சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
- எழுமலை பள்ளி
- சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
- எழுமலை அரசு
உசிலம்பட்டி, அக். 19: சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த ஆய்வில், எழுமலை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு நடத்தினர். இதற்கு பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார்.
பள்ளிக்கு வந்திருந்த பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், வேலை வாய்ப்பு, வருமானம், நுகர்வு, எதிர்பார்ப்பு உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் கேட்டறிந்தனர். இதுகுறித்து மாணவர் சக்தி கூறும்போது, ‘‘இந்த ஆய்வின் வாயிலாக, மக்களின் சமூகம் மற்றும் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற கள ஆய்வுகள், எங்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது’’ என்றார். இந்த ஆய்வில் ஆசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.