- குஷ்பு
- பிரியங்கா காந்தி
- வயநாடு
- பாஜக
- திருவனந்தபுரம்
- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- அமேதி
- அய்யனாத் தொகுதி
- தின மலர்
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்புவை பாஜக களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில பாஜக-விடம் கட்சி தலைமை கருத்து கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக பேசிய குஷ்பு; தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழத்தான் செய்கின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பா.ஜ.க. சார்பில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது. இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை. கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன். இவ்வாறு கூறினார்.
The post வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்பு போட்டியா?.. பாஜக பிரமுகர் குஷ்பு பதில்!! appeared first on Dinakaran.