ஐதராபாத்: புரோ கபடி போட்டியின் 11வது தொடர் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் புனேரி பல்தன், தமிழ் தலைவாஸ் உட்பட 12 அணிகள் களம் காணும் இந்த தொடரின் 132லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் டிச.24ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும் தேதி, இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும். வழக்கமாக புரோ கபடி லீக் சுற்றின் ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்குமான சொந்தமாக கருதப்படும் 12 நகரங்களிலும் நடத்தப்படுவது வாடிக்கை. அப்படி தமிழ் தலைவாஸ் அணிக்கான சில ஆட்டங்கள் சென்னையில் நடத்தப்படும்.
ஆனால் இந்த முறை லீக் ஆட்டங்கள் அனைத்தும் ஐதராபாத், நொய்டா, புனே என 3 நகரங்களில் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால் தொடக்கவிழா மற்றும் முதல் ஆட்டம் நடைபெற உள்ள ஐதராபாத்தில் 12 அணிகளும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-பெங்களூர் புல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சாம்பியன் புனேரி பல்தன் தனது முதல் ஆட்டத்தில் நாளை அரியானா ஸ்டீலரை சந்திக்கிறது. அதேபோல் தமிழ் தலைவாஸ் அணியும் நாளை தனது முதல் ஆட்டடத்தில் தெலுங்கு டைடன்சை எதிர்கொள்கிறது. தமிழர்களின் முக்கிய விளையாட்டுப் போட்டியான கபடி என்பதால் தமிழ் நாடு ரசிகர்கள் புரோ கபடித் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கேற்ப யு மும்பா, பாட்னா, அரியானா, புனே உட்பட பல்வேறு அணிகளில் தமிழ்நாடு வீரர்கள் களமிறங்க உள்ளது கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை சாம்பியன்கள்
வரிசை சாம்பியன் 2வது இடம்
1 ஜெய்பூர் பேந்தர்ஸ் யு மும்பா
2 யு மும்பா பெங்களூர் புல்ஸ்
3 பாட்னா பைரேட்ஸ் யு மும்பா
4 பாட்னா பைரேட்ஸ் ஜெயபூர் பேந்தர்ஸ்
5 பாட்னா பைரேட்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்
6 பெங்களூர் புல்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ்
7 பெங்கால் வாரியர்ஸ் தபாங் டெல்லி
8 தபாங் டெல்லி பாட்னா பைரேட்ஸ்
9 ஜெய்பூர் பேந்தர்ஸ் புனேரி பல்தன்
10 புனேரி பல்தன் அரியானா ஸ்டீலர்ஸ்
The post புரோ கபடி 11வது சீசன் இன்று ஐதராபாத்தில் தொடக்கம் appeared first on Dinakaran.