×

தடுப்பூசி போட 15-18 வயது உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

* 10 பேருக்கு கொரோனா அசோக்நகரின் ஒரே தெருவுக்கு ‘சீல்’* ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி பணி நிறைவு பெறும்* அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை அசோக் நகர் ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவருக்கு  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயதுக்குள்ளனாவர்கள் இருக்கிறார்களோ அவர்களை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி  போடும் பணி முழுமையாக நிறைவு பெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அசோக் நகர் 19வது தெருவில் கோவிட் தொற்று பாதிப்பினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் டாக்டர் மனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் தொற்றின் எண்ணிக்கை பரவலாக கூடிக் கொண்டே இருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் இரண்டு மடங்கு கூடுதலாக உள்ளது. கொரோனா தொற்று உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே, 25 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படவுள்ளது. சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் ஞாயிற்றுக் கிழமை 17வது  தடுப்பூசி முகாம் நடைபெறும். ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை கருத்தில் கொண்டு மூன்று இடங்களில் 500 படுக்கைகள் 3சி என்ற  வகையில் தயார் நிலையில வைத்திருக்கின்றனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதை மீண்டும் தயார் செய்து வைக்கும்படி முதல்வர் கூறியிருந்தார். அதன்படி இன்னும் 4 நாட்களில் அதுவும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. மேலும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 33 லட்சம் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி  போட வேண்டும். அதன்படி வரும் 3ம் தேதி முதல்வர் போரூரில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் துவங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த பணிகள் தொடங்க இருக்கிறது. தடுப்பூசி முகாம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தான் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளி வேலை நாட்களில் நடத்தினால் தான் சிறப்பாக இருக்கும். அதற்காக தனியாக திட்டமிட்டு எங்கெல்லாம் 15 வயது முதல் 18 வயதுக்குள்ளானவர்கள் இருக்கிறார்களோ அவர்களை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விரைவில் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி போடும் பணி முழுமையாக நிறைவு பெறும். அதன்படி முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி சென்னையில் 10ம் தேதி தொடங்க இருக்கிறது. ஒமிக்ரான் தொற்றினால் 34 பேர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. நேற்று 11 பேர் என 45 பேர் ஆகும். அதில் 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். மொத்தம் எஸ் ஜீன் ட்ராப் என்பது 129 பேர். அவர்களின் மாதிரிகள் நேஷனல் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அனுமதிக்கப்பட்டவர்கள் முதல்நிலை தொற்றுதான் ஆக்சிஜன் தேவையோ, ஐசியூ தேவை  இல்லை. நடிகர் வடிவேல், இயக்குநர் சுராஜ் போன்றவர்களுக்கு எஸ் ஜீன் இருந்தாலும் முதல் நிலை அறிகுறி தான் அதைப்போன்று 129 பேருக்கும் அதே அறிகுறி தான் உள்ளது. ரெம்டெசிவர் 14,23,404 ஊசிகள் கையிருப்பு உள்ளது. அதைப்போன்று போதுமான மருந்துகள் அனைத்தும் கையிருப்பு உள்ளது. 7 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் 711 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ம் தேதி முதல்வர் தலைமையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அதில் மற்றவை முடிவு செய்யப்படும். ஒமிக்ரானும் ஒருவகையான கொரோனா தான். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினர்.* மாநகராட்சி வாகனம் பெஸ்ட்மருத்துவ துறை அமைச்சர் மேலும் கூறுகையில், ‘ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் தனிப்பட்ட வாகனங்களில் அழைத்து வராமல் மாநகராட்சிக்கு 1913, 25384520 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டால் மாநகராட்சி வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். 45 பேரும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியதால் தான் சாதாரண அறிகுறி ஏற்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும்என்றார்.* அசோக்நகரில் அதிக பாதிப்புஅமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது, சென்னையில் 39,537 தெருக்களில் 507 தெருக்களில் தான் தொற்று பாதிப்பு உள்ளது. அதில் 429 தெருக்களில் மூன்றுக்கு குறைவாக இருப்பதால் அவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்படுவர். அசோக்நகரில் இரண்டு நாட்களில் 78 தெருக்களில் 42 தெருக்களில் 4க்கும்  மேற்பட்டவர்கள், 18 தெருக்களில் 5க்கும் மேற்ப்பட்டவர்கள் உள்ளனர்.மேலும் அசோகர்நகர் பகுதியில் ஒரே தெருவில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று வந்துள்ளது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை உதவிக்கு சென்று வந்தவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளில் பெயர்  பட்டியல் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் நேற்று முன்தினம் 194 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது என்றார்….

The post தடுப்பூசி போட 15-18 வயது உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Corona Ashoknagar ,Minister ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...