×
Saravana Stores

இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு

ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டம் மிஸ்ரோட் பகுதியை சேர்ந்தவர் பைசல் என்ற பைசன். இவர் கடந்த மே மாதம், பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக என முழக்கமிட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பைசலை கடந்த மே 17ம் தேதி போபால் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில ஜாமீன் கேட்டு மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரித்த மத்தியபிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால், “இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் நான்காம் வார செவ்வாய்கிழமைகளில் மிஸ்ரோட் காவல்நிலையத்தில் பைசல் ஆஜரா வேண்டும். அப்போது காவல்நிலைய கட்டிடத்தின் மேலுள்ள தேசிய கொடிக்கு 21 முதல் வணக்கம் சொல்லி, மரியாதை செய்ய வேண்டும். அப்போது பாரத மாதா வாழ்க என முழக்கமிட வேண்டும்” என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Nudana ,Jabalpur ,Faisal ,Misrod ,Bhopal district ,Madhya Pradesh ,M.P. ,Nuthana ,
× RELATED தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைக்க...