×
Saravana Stores

இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் அவசியம்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

புதுடெல்லி: இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் தர மூத்த வழக்கறிஞர்கள் கற்று கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அண்மையில் அகில இந்திய வானொலியில் நேர்காணல் அளித்தார். அப்போதுசந்திரசூட் கூறியதாவது: வழக்கறிஞர் தொழில் மிக கடினமானது. இளம் வழக்கறிஞர்கள் கடின உழைப்பில் ஈடுபடுவதும், தொழிலில் நேர்மையாக இருப்பதும் முக்கியம். ஆனால் இளம் வழக்கறிஞர்களுக்கு தொடக்கத்தில் நல்ல வருமானம் கிடைக்காது. எனவே முதன்முறை வழக்கறிஞர் பணிக்கு வருபவர்களை மூத்த வழக்கறிஞர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். எனவே தங்களிடம் பயில வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் தருவது அவசியம். இவ்வாறு கூறினார்.

The post இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் அவசியம்: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Chandrasuet ,NEW DELHI ,Supreme Court ,T. Y. Chandrasuet ,D. Y. Chandrasuet ,All India Radio ,
× RELATED வழக்கறிஞர்கள் தங்களிடம் வேலை...