மும்பை: மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா போர்வால் பட்டம் வென்றார். மிஸ் இந்தியா அழகி போட்டி தொடங்கி 60வது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இந்த வருடம் மிஸ் இந்தியா போட்டி பெரிய அளவில் நடத்தப்பட்டு, அழகிகள் தேர்விற்கும் பல்வேறு சுற்றுகள் வைக்கப்பட்டது. இறுதியில் மாநில அளவில் 30 அழகிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். டிவி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிகிதா, மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த ரேகா பாண்டே 2ம் இடத்தையும்,குஜராத்தை சேர்ந்த ஆயுஷி டோலக்கியா 3ம் இடத்தை பிடித்துள்ளனர். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.
The post மிஸ் இந்தியாவாக நிகிதா தேர்வு appeared first on Dinakaran.