மும்பை: 2025 சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), கேப்டன் பேட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி) ஆகியோரை தக்க வைத்துக்கொள்கிறது.
மேலும் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய இருவரையும் ரீடெய்ன் செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரிஷப் பன்ட், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரை தக்க வைக்க உள்ளது.
இவர்களை தவிர ஆர்டிஎம் மூலம் வெளிநாட்டு வீரர்களான ஜேக்-ஃப்ரேசர், மெக்குர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி, பவுலிங் பயிற்சியாளராக முனாப் பட்டேல், வேணுகோபால் ராவ் ஆகியோரை நியமிக்க பரிசீலித்து வருகிறது.
The post 2025 சீசன் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ், டெல்லி அணி தக்க வைக்கும் வீரர்கள் appeared first on Dinakaran.