×
Saravana Stores

மகளிர் டி.20 அணிக்கு கேப்டனாக ஜெமிமாவை நியமிக்க வேண்டும்: மித்தாலி ராஜ் அறிவுறுத்தல்

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 9வது மகளிர் டி.20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. இந்த தோல்வி காரணமாக இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் கேப்டன் மித்தாலிராஜ் அளித்துள்ள பேட்டி: அடுத்த வருடம் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

அதை வெல்வதற்கு இப்போதே தாமதிக்காமல் புதிய கேப்டனை நியமிப்பது அவசியம். தனிப்பட்ட முறையில் நான் 24 வயதாகும் ஜெமிமா கேப்டனாவதை விரும்புகிறேன். அனைவரிடமும் பேசி களத்தில் நல்ல எனர்ஜியை வெளிப்படுத்தி இந்தத் தொடரிலும் நம்மைக் கவர்ந்த அவரால் நீண்ட காலம் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட முடியும். ஜெமிமா பேட்டிங்கில் பெறும் நல்ல துவக்கத்தை பெரிய ரன்களாக மாற்றி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

The post மகளிர் டி.20 அணிக்கு கேப்டனாக ஜெமிமாவை நியமிக்க வேண்டும்: மித்தாலி ராஜ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jemima ,D20 ,Mithali Raj ,Mumbai ,9th Women's T20 cricket series ,UAE ,Australia ,New Zealand ,Dinakaran ,
× RELATED மகளிர் டி.20 உலக கோப்பை; வெற்றியுடன்...