×

சீர்காழியில் புனித அந்தோணியார் திருவிழா

 

சீர்காழி, அக்.17: சீர்காழியில் நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் லூர்து மாதா ஆலயத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி லூர்து மாதா பள்ளியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதஅந்தோணியர் திருவுருவசிலை ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் . ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று லூர்து மாதா ஆலயத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து அங்கு பங்கு தந்தை தோனி அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் புனித அந்தோணியார் திருவிழா appeared first on Dinakaran.

Tags : St. Anthony's Festival ,Sirkazhi ,St. Anthony ,St. Anthony festival ,Lourdes Mata Church ,Sirkazhi, Mayiladuthurai district ,Lourdes Mata School ,St. Anthony Festival in ,
× RELATED சீர்காழி நகராட்சி பகுதியில்...