×

ஆனந்தூர் பெரிய ஊரணியில் இறந்து மிதந்த மீன்களை அகற்றும் பணி தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம், அக். 17: ஆனந்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஊரணியில் திடீரென மீன்கள் செத்து மிதந்தது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கிராமத்தில் பெரிய ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் தான் ஆனந்தூர் மற்றும் அருகாமல் உள்ள கிராம மக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சியின் போது கூட இந்த ஊரணியில் மட்டும் தண்ணீர் வற்றாமல் இருந்துள்ளது. இந்த ஊரணியில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் ஊரணிக்கு நீர்வரத்து வந்துள்ளது. இந்நிலையில், குளத்தில் வளர்ந்து வந்த மீன்கள் திடீரென செத்து மிதந்து துர்நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் வரதராஜன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் உத்தரவின் பெயரில் ஊராட்சி பணியாளர்கள் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆனந்தூர் பெரிய ஊரணியில் இறந்து மிதந்த மீன்களை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Anandur ,R. S. Mangalam ,RS Mangalam ,
× RELATED புதிய தார்ச்சாலை அமைக்க கோரிக்கை