வேலூர், அக்.17: வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 01.01.2025ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் அலுவலர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாகங்கள் மறுசீரமைக்கப்பட்டு முன்மொழிவு சென்னைத் தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 1303 உள்ள பாகங்களின் எண்ணிக்கை உள்ளது. புதிதாக 11 பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 16 வாக்குச்சாவடி பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 9 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்பிற்கு பிறகு தற்போது 1,314 பாகங்களின் எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வரைவு வாக்குச்சாவடி பட்டியல் பாகங்கள் மறுசீரமைப்பு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.