×
Saravana Stores

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் ஆந்திர அரசு சார்பில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

திருமலை: திருமலை லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியசாமியுடன், பலர் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 பேர் கொண்ட அரசியல் தலையீடு இல்லாத விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த எஸ்ஐடியில் சிபிஐயில் இருந்து இரண்டு அதிகாரிகளும், ஆந்திர அரசை சேர்ந்த இரண்டு போலீசார், தேசிய உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த எஸ்ஐடியின் விசாரணையை சிபிஐ இயக்குநர் மேற்பார்வையிடுவார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு சார்பில் விசாரணை குழுவுக்கு 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகளான ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி, டி.ஐ.ஜி. கோபிநாத் பெயர்கள் மாநில அரசு சார்பில் விசாரணை குழுவுக்கு பரிந்துரைத்து அனுப்பப்பட்டுள்ளது.

The post திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் ஆந்திர அரசு சார்பில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Andhra government ,Tirupati ,Tirumala ,BJP ,Subramaniasamy ,Supreme Court ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?