×

புதுச்சேரியில் 8 ஆண்டுக்குப்பின் ரேஷன் கடைகள் 21ம் தேதி திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று அளித்த பேட்டி: தீபாவளிக்கு அறிவித்த 2 கிலோ சக்கரை, 10 கிலோ அரிசி வரும் 21ம் தேதி முதல் நியாவிலை கடைகளை திறந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை வழங்கிய பிறகு, வழக்கம் போல மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசியும், சிகப்பு அட்டைக்கு 20 கிலோ அரிசியும் தொடர்ந்து வழங்கப்படும். ரேஷன் கடைகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 8 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரியில் 8 ஆண்டுக்குப்பின் ரேஷன் கடைகள் 21ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ration ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Diwali ,
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து...