தேவையான பொருள்:
புழுங்கல் அரிசி – 250 கிராம்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 100 கிராம்
தேங்காய் எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
அனைத்து வகையான காய்கள் – 1 கிண்ணம்
கருவேப்பிலை – சிறிது
முருங்கை கீரை – 1 கிண்ணம்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
அரைக்க தேவையான பொருள்:
தேங்காய் துருவல் – சிறிதளவு
புளி – 1 எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 3
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
சீரகம் -1 டீஸ்பூன்
செய்முறை:
கூட்டாஞ்சோறு செய்வதற்கு முதலில் கத்திரிக்காய், வாழைக்காய், பட்டை அவரைக்காய் ஆகியவற்றை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை வேக வைக்கவும். துவரம் பருப்பானது பாதி அளவிற்கு வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டி வைத்துள்ள காய்கறிகள், அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு, முருங்கைக்கீரை, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும். சாதம் வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, கடலை பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும். பிறகு அதை இறக்கிவிடவும். அவ்ளோதாங்க சுவையான கிராமத்து கூட்டாஞ்சோறு ரெடி..
The post கிராமத்து ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு சமையல் appeared first on Dinakaran.