×

தண்ணீர் ஏதும் நிற்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை : எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை : பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு போர்வை, பிரட்,பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அத்துடன் தூய்மை பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கிய பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். சென்னை மாநகர தெருக்களில் எங்கும் மழை நீர் தேங்காமல் வடிந்திருப்பதே எடப்பாடி பழனிசாமிக்கான வெள்ளை அறிக்கை தான். இன்று லேசான மழை பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. கனமழையிலும் இடைவிடாமல் மீட்பு, நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தண்ணீர் ஏதும் நிற்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை : எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Deputy Chief ,Udayaniti Stalin ,Edappadi Palanisami ,Chennai ,Deputy Chief Minister Assistant Secretary ,Stalin ,Chepakkam ,Edapadi Palanisami ,
× RELATED உதயநிதி பிறந்தநாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம்