வேலூர், அக்.16: வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்து 546 விவசாயிகள் மூலம் ரூ.30.37 கோடிக்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.
இதற்கிடையில் வேலூர் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் கடந்த 2024-2025ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கடந்த 6 மாதத்தில் 10 ஆயிரத்து 988 மெட்ரிக் டன் நெல், மணிலா, தேங்காய், தானியங்கள் கொண்டு வரப்பட்டு, ரூ.30.37 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.
The post வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 மாதத்தில் ரூ.30.37 கோடிக்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.