- நாசரேத்
- Atur
- செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- முதல்வர்
- வயோலா மார்கரெட்
- செயின்ட் ஜான்ஸ் கதீட்ரல்
- தலைமை ஆசிரியர்
- ஹென்றி ஜீவானந்தம்
- தின மலர்
நாசரேத், அக். 16: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் வயோலா மார்க்கரெட் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். தலைமை ஆசிரியை கமலியா கெத்சி வரவேற்றார். நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி கலந்து கொண்டு 199 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை சாராள் ஜெயா தொகுத்து வழங்கினார்.
இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், கவுன்சிலர்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, செல்லா, ரதி, நாசரேத் சேகர முன்னாள் பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தலைமை ஆசிரியர் கங்கா கவுரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமாலுதீன் கலந்து கொண்டு 30 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் ஆத்தூர் நகர திமுக செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் பாலசிங், அசோக் குமார், முத்து மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் புகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாசரேத், ஆத்தூர் பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.