×
Saravana Stores

வழிப்பறியில் ஈடுபட்ட புதுவை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 

விழுப்புரம், அக். 16: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட புதுவை வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ஹிதேஷ்ஷா(44). இவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமான புதுச்சேரி நோணாங்குப்பத்தை சேர்ந்த லோகு(எ) லோகநாதன்(35) என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார்.

பின்னர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு சாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அதன்படி திண்டிவனம் வந்த ஹிதேஷ்ஷா பின்னர் அங்கிருந்து ராஜாராஜன் என்பவருக்கு சொந்தமான காரில் ரூ.35 லட்சம் பணத்துடன் ஹிதேஷ்ஷா சென்றுள்ளார்.

பின்னர் லோகநாதன் மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் காரை மறித்து கத்தி, கட்டையால் தாக்கி பணம் மற்றும் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லோகநாதன் கைது செய்யப்பட்ட நிலையில் லோகநாதனின் குற்ற நடவடிக்கை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக் சிவாச் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து நேற்று ஆட்சியர் பழனி உத்தரவிட்டார். தொடர்ந்து ரோசணை காவல் நிலைய போலீசார் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறியில் ஈடுபட்ட புதுவை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Tindivanam ,Villupuram district ,Hiteshsha ,Ambattur, Chennai ,Facebook ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல்...